ஒரு குட்டி காதல் கதை ...!




எனக்கு
பிடித்த ஒன்றையும்
பிடிக்காத ஒன்றையும்
இந்த தாளில்
எழுதியுள்ளேன்,
சொல் உனக்கு எது
பிடித்திருக்கின்றது
என்றொரு தாளை நீட்டினாய்.
தாளை வாங்கிப் படிக்காமலே
"இரண்டுமே " என்றேன்...
ஏன் என்றாய் ?
அந்த இரண்டையுமே
நீ எழுதியுள்ளதால்
என்றேன்...
உனக்கு
என்னை பிடிக்க
ஆரம்பித்திருந்தது ....

நம்ம பய ...

நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம பய யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா .....

புதிர்...!

நீ நாளை
மாக்கோலம் இடுவாயா
இல்லை
மலர்க்கோலம் இடுவாயா
இதுதான்
இரவெல்லாம்
நான் அவிழ்க்க நினைக்கும்
புதிர்...!

மனசு ...


சிற்றுண்டி முடித்து
அலுவுலகம் கிளம்புகையில்
சிறுவுண்டி வைத்து ,
கடவுள் வேடமிட்டு
காசு கேட்கும்
சிறுவனிடம் ,
கடவுள் நம்பிக்கையே
இல்லையெனிலும் ,
காசு போடாமல் போக
வருவதில்லை மனசு...

அவளுக்காக ...!


ஆயிரம் கவிதைகள் அச்சேற்றாமல் அடுக்கி வைத்திருக்கிறேன் என் இதய அறையில்... அவளுக்காக....

என்னை விட்டுவிடாதே ...


வேண்டாம் என்று என்னை
விட்டுவிடாதே...

அதற்கு பதில்
வேகும் நெருப்பில் என்னை தள்ளிவிடு....